தஞ்சாவூர் செப்.1- தஞ்சை பட்டுக்கோட்டை அருகிலுள்ள மதன்பட்டவூர் கிராமத்தில் கஜா புயலின் போது ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. இதனால் பசுமையை மீட்க கிராமத்தினர் முடிவு செய்தனர். இதையொட்டி இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவரும், தற்போது புதுதில்லியில் காவல்துறை உதவி ஆணையராக பணியாற்றி வரும் ஆர்.சத்தியசுந்தரம் தலைமையில் முயற்சி எடுக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ரீ பாரஸ்ட் இந்தியா என்ற அமைப்பினரும், பட்டுக்கோட்டை இந்திராகாந்தி யூத் பவுண்டேஷன் என்ற அமைப்பினரும் இணைந்து, சனிக்கிழமை வீட்டுக்கு வீடு சென்று, தென்னை, மா, பலா உள்ளிட்ட 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டும், மேலும் பொதுமக்களிடம் மரம் வளர்ப்பதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ரீ பாரஸ்ட் அமைப்பினர் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்று தாங்களே மரக்கன்றுகளை வீடுகள் தோறும் நட்டனர்.