சென்னை,ஜனவரி.24- வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் குற்றவாளிகள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன், முரளி ராஜா ஆகிய 3 பேருக்குத் தொடர்பிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வேங்கை வயல், இறையூர் கிராமங்களை உள்ளடக்கிய முடுக்காடு பஞ்சாயத்துத் தலைவரைப் பழிவாங்குவதற்காகத் தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாகத் தமிழ்நாடு அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்த நிலையில், 750 நாள்களுக்குப் பிறகு புதுக்கோட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.