புதுக்கோட்டை, மார்ச் 7- தமிழன் எந்தச் சுழ்நிலையிலும் தாய்மொழியை விட்டுத்தரமாட்டான் என்றார் தமுஎகச மாவட்டத் துணைத் தலைவரும் கல்வியாளருமான ராசி.பன்னீர்செல்வன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில் கறம்பக்குடியில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற தாய்மொழி தினக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது: மனித நாகரிகம் மொழியில்தான் தொடங்குகிறது. உணவு உற்பத்தியைவிட, பொருளாதாரத்தைவிட, அரசியலைவிட மனித நாகரிகத்தின் உச்சமாகக் கருதப்படு வது மொழிதான். ஒருவனுடைய நிலவிய லோடு, வாழ்வியலோடு, சமூகவியலோடு, அரசியலோடு, தொன்மங்களோடு எந்த மொழி பொருந்திப்போகிறதோ அதுதான் அவனது தாய்மொழி. தாய்மொழி அல்லாத எந்த மொழியும் புழங்கும் மொழிதான். இதர மொழிகள் எல்லாம் புரிந்துகொள்ள உதவு கிறது. தாய் மொழி மட்டும்தான் உணர்ந்து கொள்ள உதவுகிறது. இயற்கை எய்தினார். காலமானார் போன்ற சொற்களுக்கு நேரடியாக ஆங்கி லத்தில் மொழிபெயர்க்க முடியாது. சில மரபுகளை தாய்மொழியினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இந்நிலையில், உலகில் 40 சதவீதமானவர்களுக்கு அவர்க ளின் தாய்மொழியில் பாடத்திட்டங்கள் இல்லை என்ற அதிர்ச்சிகரமான புள்ளி விபரம் சொல்கிறது. ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் உள்ள பெரும்பகுதியான மக்களின் தாய்மொழிகள் அலுவல் மொழி களாக இல்லை. பேசுவதற்குத்தான் மொழி. பேச்சு வழக்கில் இல்லாத எந்த மொழியும் பயனற்ற மொழிகளே! உலகின் மிக மூத்த மொழிக ளான செவ்வியல் மொழிகளில் இன்றைக் கும் மக்கள் புழங்கும் மொழிகளாக இருப்பது சீனமும், தமிழுமே! அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மொழியை இந்திய அரசு உச்சத்தில் வைத்துக் கொண்டாடி இருக்க வேண்டாமா? கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை. அதை சிதைப்பதிலும், சிறுமைப்படுத்தும் வேலையில் அல்லவா இறங்கவிட்டனர். இந்தியாவிலேயே அதிக மொழிச் சுரணை உள்ளவனாக தமிழன் இருந்து வந்திருக்கிறான். தாய் மொழிக்கு ஒரு பிரச்சனை என்றால் மற்றவர்களைவிட தமிழன் வெகுண்டெழுகிறான். மொழி உரி மையை கையில் எடுத்து ஆட்சி மாற்றத் தையே உருவாக்கிய மண் தமிழ்மண். தமிழன் ஒருபோதும் தனது மொழியை விட்டுக்கொடுக்க மாட்டான். கருத்தரங்கிற்கு தமுஎகச கிளைத் தலைவர் ஷெல்லிமனோகர் தலைமை வகித்தார். வம்பன் செபா எழுதிய ‘பரிச ளிக்கிறது பூத்த மரமொன்று’ என்ற கவிதை நூலை விமர்சனம் செய்து மாவட்டச் செயலாளர் சு.மதியழகன் பேசினார். மாவட்டத் தலைவர் எம்.ஸ்டாலின் சரவணன் கருத்துரை வழங்கினார். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் துரை.அரி பாஸ்கர் வரவேற்க, பெ.வீரபாலன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை வீ.முத்து தொகுத்து வழங்கினார்.