புதுக்கோட்டை, ஜூன் 9- காவிரி நதிநீர்ப் பிரச்சனையை எதிர்க் கட்சியினரிடம் திருப்பிவிட்டு, பொறுப்பற்ற முறையில் பேசி வருவதாக இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்த ரசன் குற்றம் சாட்டினார். சிவகாமி ரத்ததான கழகத்தின் சார்பில் 100-ஆவது ரத்ததான முகாம் புதுக்கோட்டை யில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மூர்த்தி தலைமை வகித்தார். நடிகர் சினே கன் முன்னிலை வகித்தார். ரத்ததான முகாமை தொடங்கி வைத்த முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவில் மேக தாது அணையை கட்டுவோம் என்று ராகுல் காந்தி கூறவில்லை. காவிரி பிரச்சனையில் தன்மீது வரும் பழியை திசைதிருப்பவே முதல்வர் அப்படிக் கூறுகிறார். காவிரி விவ காரத்தை எதிர்க்கட்சியினர் பார்த்துக்கொள் வார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதும் பொறுப்பற்ற பேச்சு. தமிழக முதல்வர் என்கிற அடிப்படை யில் எடப்பாடி பழனிசாமி மத்திய அர சிடம் அழுத்தம் கொடுத்து காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவில் நிலவிவரும் ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை பிரச்ச னையில் எடப்பாடி அரசு ஆட்டங்கண்டுள் ளதையே காட்டுகிறது. தனது ஆட்சி கலைக் கப்பட்டாலும் பரவாயில்லை; புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல் படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மவுனம் காப்பது ஏன்? ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட மக்களுக்கு எதிரான அத்தனை திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தத் துடிக்கிறது. இவர்கள் ஆட்சியில் இருக்கத் தகுதியற்றவர்கள். இவ்வாறு முத்தரசன் கூறினார்.