பொன்னமராவதி: புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே கொன்னையூர் அம்பாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் முண்டையன் தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராசு, பொன்னமராவதி போக்குவரத்து ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி, சிதம்பரம் மெட்ரிக்குலேஷன் பள்ளி முருகேசன், முத்தமிழ் பாசறை தலைவர் சந்திரன், கொன்னைப்பட்டி ஊராட்சி தலைவர் செல்வமணி, கொப்பனாபட்டி ஊராட்சி தலைவர் மேனகா, கொப்பனாபட்டி நாராயணன் செட்டியார் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் திருநாவுக்கரசு, கலைமகள் கல்லூரி தலைமையாசிரியை முல்லை, ரோட்டரி சங்க செயலாளர் ராமன், கொப்பனாபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் மாரிமுத்து, சுப்பையா, உடற்கல்வி ஆசிரியர்கள் முரளிதரன், லெட்சுமணன், சக்திவேல், சுப்பிரமணியன், கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ- மாணவிகளுக்கு கிரிக்கெட், கால்பந்து, பாட்டில் நீர் நிரப்புதல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவ- மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் சாந்தி நன்றி கூறினார்.