தரங்கம்பாடி, ஜூலை 26- நாகை மாவட்டம், செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா வீர சாகச நிகழ்ச்சி களோடு வெள்ளியன்று நிறைவடைந்தது. கடந்த 2 தினங்களாக கலைமகள் கல்வி நிறுவன நிர்வாக இயக்கு நர் என்.எஸ்.குடியரசு தலைமையில் நடைபெற்ற விளை யாட்டு விழாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர். மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், விளை யாட்டுத் துறையை பற்றி அறிந்துக் கொள்ளும் விதமாக சர்வதேச, தேசிய அளவில் பல்வேறு பிரிவில் சாதனைப் படைத்த விளையாட்டு வீரர்களின் வரலாற்றை கண்காட்சி யாக மைதானத்தை சுற்றி அமைத்திருந்தனர். நிறைவு நாளன்று வீர சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங் கப்பட்டது.