புதுக்கோட்டை, செப்.24- புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது: கோ-ஆப்டெக்ஸ் நிறு வனம் தீபாவளி சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை, போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவை உள்ளிட்ட பல்வேறு ரகமான சேலை கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், ஆயத்த ஆடைகள் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறு வனம், ‘கனவு நனவு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 வது மாத சந்தா தொகை யை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப் படும் துணிகளை 30 சதம் அரசு தள்ளு படியுடன் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை முக்கனி விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது ரூ.90.19 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.1.25 கோடி விற் பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான துணிகள் வாங்கி நெசவாளர் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சு.மாணிக்கம், கோட்டாட்சியர் தண்டா யுதபாணி, மேலாளர்கள் இரா.சீனி வாசன், சரவணன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.