புதுக்கோட்டை, செப்.30- புதுக்கோட்டையில் திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திருநங்கைகளுக்கான வீட்டுமனைப் பட்டா கோரிக்கை உள்ளிட்டு பொதுமக்களி டமிருந்து 350 மனுக்கள் குவிந்தன. இதுகுறித்து ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளது: வரப்பெற்ற நியாயமான கோரிக்கைகள் மீது உட னடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. மேலும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஆவுடை யார்கோவில் மற்றும் பொன்னமராவதி வட்டத்தை சேர்ந்த 2 பயனாளிகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் காசோலை யும், திருநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தனபாக்கி யம் என்பவருக்கு கருணை அடிப்படையில் சமையலர் பணியிடத்திற்கான ஆணையும், 1 நபருக்கு மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் ரூ.4,12,500 மதிப்பீட்டில் தீருதவி உதவித்தொகைக்கான காசோலைகளும் என மொத்தம் ரூ.5,62,500 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலு வலர்களும் கலந்து கொண்டனர்.