புதுக்கோட்டை, ஜூலை 15- புதுக்கோட்டை மாவ ட்டம் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்ப ள்ளியில் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழ ங்கப்படாததைக் கண்டித்து திங்கள் கிழமையன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில் கடந்த 2017-18 கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு இன்னும் மடிக்கணினி வழங்க வில்லை. இதற்கிடையில் நடப்பா ண்டில் படிக்கும் மாண வர்களுக்கு மடிக்கணினி வழ ங்குவதற்கு ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருந்தன. இதனை அறிந்த முன்னாள் மாணவர்கள் கற ம்பக்குடி சீனி கடை முகத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் சஞ்சய், சர த்குமார், திருமூர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியப் பொருளா ளர் சின்னத்துரை, ஒன்றிய க்குழு உறுப்பினர் பார்த்தி பன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். தகவலறிந்து வந்த காவ ல்துறை மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தொடர்பு கொண்டு ஒரு வாரத்திற்குள் மடிக்கணினி வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என மாணவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளப்பட்டது.