tamilnadu

img

மடிக்கணினி கேட்டு மாணவர்கள் போராட்டம்

விருதுநகர்:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மற்றும் தொழிற்பயிற்சி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் இலவச மடிக்கணினிவழங்கப்பட்டு வருகிறது. கடந்த2017-18-ஆம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு  தற்போது வரை மடிக்கணினி ழங்கப்படவில்லை. தற்போது, அம்மாணவர்கள், கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், உடனடியாக மடிக்கணினி வழங்க வலியுறுத்தி விருதுநகர்  ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர்சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும்முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர். போராட்டத்தில் மாவட்டத் தலைவர் கே.சமையன், மாவட்ட செயலாளர் கே.மாடசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.