tamilnadu

img

மடிக்கணினி கேட்டு மாணவர்கள் போராட்டம்

காஞ்சிபுரம், ஜூலை 19-  காஞ்சிபுரம் மாவட்டத்தில்  2017- 18 ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்க ளுக்கு மடிக்கணினி வழங்காததை கண்டித்து  இந்திய மாணவர் சங்கம் சார்பில்  மாணவர்கள் வெள்ளியன்று (ஜூலை 19) முதன்மைக் கல்வி அலுவல கத்தை முற்றுகையிட்டனர். இது பற்றி தaகவலறிந்த முதன்மைக் கல்வி அலுவலர் மாணவர்கள் கொடுத்த மனுக்களை அரசுக்கு தகவல் தெரிவித்து, விடுபட்ட அனைவருக்கும் விரைவில் மடிக்கணினி  வழங்கப்படும் எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து போராட்டம் முடித்துக் கொள்ள ப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழ் பாரதி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் அஜய், கோட்டச் செயலாளர் குமரன், வாலிபர் சங்க நகரச் செயலாளர்  இ.சங்கர்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.