காஞ்சிபுரம், ஆக.21- காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டத்திற்குட்பட்ட சோத்துப்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இப்பள்ளியில் கடந்த 2017-18, 2018 - 19 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் 200 பேருக்கு மடிக்கணினி வழங்கவில்லை. இந்நிலையில் தற்போது, பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு கடந்த வாரம் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த முன்னாள் மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் சென்று முறையிட்டுள்ளனர். ஆனால் அவர் மாணவர்க ளிடம் உரிய பதில் சொல்ல வில்லை எனக் கூறப்படு கிறது. இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்து டன் இணைந்து முன்னாள் மாணவர்கள் பள்ளி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் மாண வர்களுன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ள தாகவும், 3 மாதத்தில் மடிக்கணினி வழங்க நட வடிக்கை எடுப்பதாகக் கூறி னார். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்ப ட்டது.