புதுக்கோட்டை, ஜூன் 8- ஊரடங்கால் கடுமையா கப் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில் அபராத வட்டியுடன் கடனை அடைக்குமாறு தனியார் நிதி நிறுவனங்கள் சுயஉதவிக்குழுப் பெண் களை நிர்பந்திக்கும் கொடு மையைத் தடுத்து நிறுத்தக் கோரி திங்கள்கிழமையன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எஸ்.பொன்னுச் சாமி, அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி. சலோமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரை. நாராயணசாமி ஆகியோர் தலைமையில் ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவிவித்தி ருப்பது: கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையால் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இதனால், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் சுயஉதவிக்குழுவினர் தங்கள் பெற்ற கடனை அடைக்க முடியாமல் சிரமப் பட்டனர். சுய உதவிக்குழுவி னருக்கு கடன் கொடுத்த தனியார் வங்கிகள் மற்றும் நுண்நிதி நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்க ளாக கடனை அடைக்க வலியு றுத்தி அதிக கெடுபிடிகள் காட்டாமல் இருந்தன. இந்நிலையில், தற்பொ ழுது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு கடனை திரும்பச் செலுத்த மேற்படி நிறுவனங்கள் வலி யுறுத்துகின்றன. அதாவது, வட்டிகட்டாத இரண்டு மாதப் பாக்கியையும் சேர்த்துக் கட்டுவதோடு, வட்டிக்கு வட்டி போட்டு கட்டச் சொல்லி வற்புறுத்துகின்றன. ஏற்கனவே, வாழ்வாதா ரத்தை இழந்து தவிக்கும் அவர்களுக்கு இது மேலும் பேரிடியாக வந்து விழு கிறது.
இதானல், மேற்படி கடன்பெற்ற சுய உதவிக் குழுப் பெண்கள் கடுமை யான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, மேற்படி நிறுவ னங்களை மேலும் சில மாதங்களுக்கு கடனையோ வட்டியையோ கட்டுவதிலி ருந்து தளர்வு அளிக்க வேண்டும். கொரோனா காலத்தில் எந்தவிதமான வட்டியையோ? கடனையோ அடைக்கச் சொல்லி அவர்க ளை நிர்பந்திக்கக்கூடாது. மத்திய மாநில அரசுகள் சுய உதவிக்குழுவினர் பெற்று ள்ள கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதற்கும் நட வடிக்கை எடுக்க வேண்டு மென அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது. மனு அளிப்பின்போது நிர் வாகிகள் எம்.ஜியாவுதீன், கே.சண்முகம், ஜி.நாகரா ஜன், எம்.ஆர்.சுப்பையா, பி. சுசீலா, எஸ்.பாண்டிச்செல்வி, ஆர்.சோலையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.