tamilnadu

ரௌத்திரம் பழகு நிகழ்ச்சி

அறந்தாங்கி, ஏப்.2- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆவணத்தான் கோட்டை மேற்கு பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியான ரௌத்திரம் பழகுநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் வரவேற்புரை நிகழ்த்தினார். அரசு மருத்துவர் மனோகரி, பாலியல் சார்ந்த தொந்தரவுகளை எவ்வாறு எதிர்கொள்வது என பெண் குழந்தைகள் மற்றும் ஆசிரியைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுமதி நன்றி கூறினார்.