அறந்தாங்கி, செப்.7- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புதுக் கோட்டை மாவட்டம் கிளை சார்பாக ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற இயக்க போராளி சிவா குடும்ப பாதுகாப்பு நிதியளிப்பு மற்றும் சிறை சென்ற இயக்கப் போராளிகளுக்கு பாராட்டு விழா அறந்தாங்கி யில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் த.ஜீவன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ச.வின்சென்ட், க.முத்து சாமி, சே.பேச்சியம்மாள், ககருப்பையா இளையராஜா, வே.கீதா மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் இரா.ரெங்க சாமி, ஆ.சந்திரபோஸ், மா.குமரேசன், ஆர்.தங்கமணி வாழ்த்தி பேசினார்கள். மாநில செயலாளர் வெ.ஹேமலதா சிறை சென்ற போராளிகளுக்கு பொன்னாடை அணி வித்து பாராட்டினார் மாநிலத் துணை தலைவர் இரா.தமிழ்ச்செல்வி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார் பொதுச் செயலாளர் ச.மயில், மறைந்த சிவா குடும்ப பாது காப்பு நிதி வழங்கி சிறப்புரை வழங்கினார். நிறைவாக மாவட்ட பொருளாளர் கோ.சக்திவேல் நன்றி கூறினார்.