அறந்தாங்கி, ஜூன் 30- புதுக்கோட்டை மா வட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறு த்தம் அறிவித்துள்ளனர். கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்ப டகுகள் உள்ளன. இரண்டு மாதம் மீன்பிடித் தடைக்கா லத்திற்க்கு பிறகு கடந்த ஜூன் 13 முதல் மீனவர்கள் கட லுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். மீன் பிடித் தடைக்காலத்திற்க்கு பிறகு நண்டு, இறால் அதிகமாக கிடைக்கும் என்று எதிர்பா ர்த்த மீனவர்களுக்கு போதிய மீன் வரத்து இல்லை, குறை வாகவே உள்ளது என்று வேத னை தெரிவித்தனர். இந்நிலையில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெ ட்ரோல், டீசல் விலை உய ர்வால் தொழிலுக்குச் செல்லவே மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஒரு முறை கடலுக்குச் சென்று வந்தால் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாக தெரிவித்தனர். மேலும் வட்டிக்கு கடன் வாங்கி கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தாலும் இறால், நண்டிற்கு உரிய விலை கொடுத்து வாங்க இறால் நிறுவனங்கள் மறுக்கின்றன. இதனால் ரூ. 700 வரை விற்க கூடிய இறால், ரூ. 250 முதல் 300 வரை மட்டுமே நிறுவனங்கள் விலை கொ டுத்து வாங்குகின்றன. இதே நிலை நீடித்தால் மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி யாகி விடும். எனவே மத்திய -மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும். இறால், நண்டிற்கு உரிய விலை கொ டுக்க இறால் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என மீன வர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர். அதுவரை காலவ ரையற்ற வேலை நிறுத்தம் தொ டரும் எனவும் தெரிவித்துள்ள னர். இதனிடையே திங்கள் முதல் ஜெகதாப்பட்டினத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.