tamilnadu

img

சிபிஎம் போராட்ட அறிவிப்பால் பழுதான சாலையை செப்பனிடும் பணி துவக்கம்

அறந்தாங்கி, அக்.26- புதுக்கோட்டை மாவட்டம் மனமேல்குடி ஒன்றியம் கிழக்கு கடற்கரை சாலை அம்மாபட்டினத்தில் இருந்து விச்சூர், பாப்பனூர், விருதுவயல், பரனுர் வரை பள்ளமும் குழியுமாக போக்குவரத்திற்கு சிரமமாக உள்ள சாலையை செப்பனிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் ஊர் பொதுமக்கள் சார்பாக வும் ஒன்றிய செயலாளர் கரு. இராமநாதன் தலைமையில் சமூக ஆர்வலர் கந்த.முருகே சன் முன்னிலையில் சாலை யில் மரக்கன்று நடும் போ ராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் செய்யது இப்ராஹிம், மண மேல்குடி உதவி பொறியா ளர் வீரமுத்து சாலை ஆய்வா ளர் காளிமுத்து காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா ஆகி யோர் முயற்சியில் உடனடி யாக தற்காலிக சீரமைப்பு நடைபெற்றது. மேலும் அம்மாபட்டினம் சந்திப்பில் இருந்து விச்சூர், பாப்பனூர், பரனூர், வரை சுமார் 8 கி மீட்டர் சாலை உடன் செப்ப னிட ரூ. 2.30 கோடி ஒதுக்கப் பட்டிருப்பதாக சம்பந்தப் பட்ட அதிகாரிகள் தெரிவித்த னர். முழுவீச்சில் வேலை நடைபெறுவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.