புதுக்கோட்டை, ஜூலை 18- புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019-20 ஆம் ஆண்டிற்கு 66 பணிகள் ரூ.20.27 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு, பாசனதாரர்கள் பங்களிப்பு டன் 44 பணிகள் தற்போது தொடங்கி நடைபெறுகிறது. இந்த பணிகள் நடைபெறும் கறம்பக்குடி வட்டாரம் ஆய்வின் போது, குளங்களின் கரைகளை குறிப்பிடப்பட்டுள்ள அளவு களில் பலப்படுத்தவும், பழுதடைந்த கலிங்குகள் மற்றும் மடை களை மறுசீரமைப்பு செய்து பழுது பார்க்கவும், மழைநீரை சேமிக்கும் வகையில் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். ஆய்வில் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்கள் உமாசங்கர், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.