புதுக்கோட்டை, பிப்.13- புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மக் கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்த பபடும் என அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் புதன்கிழமையன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசியது: இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.7,677 கோடி. காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 119 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்து அதில் பெறப்படும் உபரி நீர் வினாடிக்கு 6,360 கன அடி வீதம் கொண்டு வரப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 760 கண்மாய்களுக்கு நீர் ஆதாரம் பெறும். இதனால் 20,249.26 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. காவிரியில் கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருடம் முழுவதும் காவிரி வருவது உறுதி செய்யப்பட்டு முப்போகம் விளைச்சல் மேற்கொண்டு புதுக்கோட்டை செழிக்கும். மற்றும் ஒரு மைல் கல்லாக நாளை மறுதினம் (இன்று) நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என் றார்.