அறந்தாங்கி, அக்.23- புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கி ரோட்டரி கிளப் மற்றும் அறந்தாங்கி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையும் இணைந்து விபத்தில்லா தீபாவளி கொண்டாடு வது பற்றி அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விளக்கம் அளிக் கப்பட்டது. வெடிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும், என்கிற வகையில் அறந் தாங்கி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மோகன் மற்றும் அவரது குழுவினர் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் .கண்ணையன் தலைமை வகித்தார். அனைவரையும் பள்ளி முதல்வரும், அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். நிகழ்வில் துணை ஆளுநர் கராத்தே கண்ணையன், உறுப்பி னர்கள் பார்த்திபன், வீரமாகாளியப்பன், மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் நிறைவாக பள்ளி துணை முதல்வர் மெரைன் நன்றி கூறி னார்.