tamilnadu

img

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டிய அவலம் மாணவர், மாதர், வாலிபர் சங்கம் முற்றுகை போராட்டம்

புதுக்கோட்டை, ஆக.8- புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கழிப்பறை இல்லாததால் மாணவிகள் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்த வேண்டிய அவலத்தைக் கண் டித்து மாணவர், மாதர், வாலிபர் சங்கத்தினர் வியாழக்கிழமை கல்லூரி முன்பாக முற்று கைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலி ருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ளது அரசு மகளிர் கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என மாணவிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மாணவிகள் பயன்படுத் தும் கழிப்பறை முற்றிலும் சேதமடைந்துள்ள தால் அதைப் பயன்படுத்த முடியாமல் மாணவி கள் தவித்து வருகின்றனர். வேறு வழியின்றி கல்லூரி வளாகத்தில் உள்ள  திறந்தவெளி யை கழிப்பறையாக மாணவிகள் பயன் படுத்தி வந்துள்ளனர். நாப்கின் எரியூட்டும் இயந்திரமும் பழுதடைந்துள்ளதால் மாணவி கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி வந்துள்ளனர்.  கடந்த கஜா புயலின் போது கல்லூரி வளா கத்தில் நின்றிருந்த மரங்கள் சாய்ந்ததில் கல்லூரியின் ஒருபகுதி சுற்றுச்சுவர் தரை யோடு இடிந்து சாய்ந்து விட்டது. இதனைப் பயன்படுத்தி கடந்த புதன்கிழமையன்று மாண விகள் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் போது, காமுகன் ஒருவன் மறைந்து நின்று பட மெடுத்துள்ளான். இதைப் பார்த்த மாணவி கள் அதிர்ச்சியில் அலறி சத்தம் போட்டுள்ளனர். மேலும், அந்த காமுகனைப் பிடித்து புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஒப்ப டைத்துள்ளனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. மேற்படி சம்பவத்தைக் கண்டித்தும் மாண விகளை செல்போனில் படமெடுத்த காமுகன் மீது வழக்குப் பதிவு செய்து உரிய தண்டனை பெற்றுத்தரக் கோரியும், பழுதடைந்துள்ள கழிப்பறையை உடனடியாக செப்பனிடக் கோரியும், நாப்கின் எரியூட்டும் எந்திரத்தை உடனடியாக பழுதுநீக்கி மாணவிகள் பயன் படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி யும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராய ணன், நகரத் தலைவர் எஸ்.விக்கி, மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினர் பாண்டி யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை காவல் நிலையத்திலும் இதுகுறித்து புகார் கொடுக் கப்பட்டது. போராட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை வட்டாட்சி யர் பரணி, புதுக்கோட்டை நகர காவல் துணை ஆய்வாளர்கள் பூர்விகா, பிரகாஷ், புதுக் கோட்டை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது அடுத்த 10 தினங்களுக்குள் மாணவிகள் பயன்படுத்தும் வகையில் கழிப்ப றையை மராமத்து செய்வது, பழுதான நாப்கின் எந்திரத்தை சரிசெய்வது, மேலும், புதிய எந்தி ரம் ஒன்றையும் வாங்குவது, இடிந்த சுற்றுச் சுவரை கட்டித்தருவது என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து நகராட்சிப் பணி யாளர்கள் கல்லூரி வளாகத்தில் இருந்த முட்செடிகளை அகற்றியும், கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டனர். (நமது நிருபர்)