திருச்சிராப்பள்ளி, ஜூன் 22 - இந்திய ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டு சேவையாற்றும் அக்னி பாதை திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது இந்திய ராணுவத்தை ஒப்பந்த முறையில் மாற்றுவதற் கான திட்டமாகும். அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக தேசப்பற்று மிக்க இளைஞர்கள், மாண வர்கள் போராடி வருகின்றனர். தில்லியில் போரா டிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்க அகில இந்திய தலைவர் களை கடுமையாக தாக்கி கைது செய்தததை கண்டித்தும். அக்னி பாதை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், இந்திய மாணவர் சங்கம், வாலி பர் சங்கம், சிஐடியு, மாதர் சங்கம் சார்பில் புதன் கிழமை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங் கள், ரயில் மறியல் போராட்டங்கள் நடை பெற்றன. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி புறநகர் மாவட்ட லால்குடி ஒன்றியக்குழு சார்பில் புதனன்று லால்குடி ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கீதாராணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெகதீசன், மாவட்டக் குழு உறுப்பினர் கர்ணன், மாவட்ட துணைத்தலைவர் ஜார்ஜ், மாவட்ட பொருளாளர் ஆணைமுத்து ஆகியோர் பேசினர். மாவட்ட செய லாளர் நாகராஜ் நிறைவுரையாற்றினார். திருச்சி மாநகர் மாவட்ட சிஐடியு, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் விவசாய சங்கம் சார்பில் ஒத்தக்கடை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட தலை வர் ராமர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சிஐடியு நிர்வாகிகள், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, மாவட்ட தலைவர் ரேணுகா, விவசாயிகள் சங்க கார்த்திகேயன், தங்கதுரை, பிஎஸ்என்எல் சுந்தர்ராஜன் ஆகி யோர் பேசினர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ தலைமையில் ரயிலை மறிக்க பேரணி யாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், போராட்டக்காரர் களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, ரயிலை மறிக்க முயன்ற மாணவர் சங்கத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதற்காக ரயில் நிலையத்தில் டிஎஸ்பிக்கள் வசந்தராஜ், லாமேக் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்டத் தலைவர் சந்தோஷ், மாவாட்டக்குழு உறுப்பினர்கள் மகாதீர், மகா லெட்சுமி, கார்த்திக், பாலாஜி உள்ளிட்டோர் பேசினர்
குடவாசல்
கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் கடைவீதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக அக்னிபாதை திட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செய லாளர் எஸ்.ஜெய்கிஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு கண்டன உரையாற்றினார்.
கும்பகோணம்
மாணவர் சங்கத்தினர் கும்பகோணம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ரயில் நிலை யத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்டச் செயலாளர் ச.பிரபாகரன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாணவர் சங்க மாநில துணை செயலாளர் கோ.அரவிந்த சாமி பேசினார்.
அனைத்துக் கட்சி
அனைத்து கட்சிகள் சார்பில் கும்ப கோணம் தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் மாநகரச் செயலாளர் செந்தில் குமார் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவபாரதி, மாநகர மாமன்ற உறுப்பினர் செல்வம், கும்பகோணம் ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ், திமுக நகர செய லாளர் தமிழழகன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், விசிக மாவட்ட செயலாளர் உறவழ கன், சிபிஐ ஒன்றிய செயலாளர் பாலா, திராவிட விடுதலைக் கட்சி இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூரில் மாணவர், வாலிபர் சங்கம் இணைந்து புதன்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டம் குறித்த தகவ லறிந்து ஏராளமான காவல்துறையினர் குவிக்கப் பட்டிருந்தனர். காவல் தடுப்புகளை மீறி ஆவேச மாக ரயிலை மறிக்க சென்ற இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து அருகில் இருந்த மண்டபத்தில் அடைத்தனர். இம்மறியலில் மாண வர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஆறு. பிரகாஷ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு, மாவட்டத் தலைவர் எஸ்.எம்.சலாவுதீன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று கைதாகினர்.