tamilnadu

img

விராலிமலை ஜல்லிக்கட்டில் 600 காளைகள் பங்கேற்பு

புதுக்கோட்டை:
19.1.2020 அன்று நடை
பெற உள்ள புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஜல்லிக்கட்டுப் போட்டிக் கான விழாப் பணிகளை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர் களிடம் அவர் தெரிவித்த தாவது:கடந்த ஆண்டு நடை பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடங்கி வைத்தனர். மேலும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியை லண்டனை சேர்ந்த உலக சாதனை கூட்டமைப்பின் உறுப்பினர்களான மார்க் மற்றும் மெலனி ஆகியோர் பார்வையிட்டு மதிப்பீடு செய்து 1,353 காளைகள் இடம்பெற்று உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டும் உயர்நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறை களின் படி அரசின் விதி முறைகளுக்கு உட்பட்டு தமிழகத்தில் மிகச்சிறந்த 600 காளைகளை மட்டும் தேர்வுசெய்து இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்குபெறச் செய்து வீரர்கள், காளைகள் மற்றும் பார்வையாளர் களுக்கு ஒரு பாதுகாப்பான போட்டியாக இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட உள்ளது.கால்நடைத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடைத்துறை, வருவாய்த்துறை போன்ற 
பல்வேறுதுறைகளின் சார்பில் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படு வதுடன் கால்நடைப் பராமரிப்புதுறையின் சார்பில் கால்நடைகளுக்கு சிகிச்சைஅளிக்கும் வகையில் நட மாடும் அம்மா ஆம்புலன்ஸ் சிகிச்சை ஊர்தியும் போட்டி நடைபெறும் இடங்களில் தயார் நிலையில் வைக்கப் பட்டிருக்கும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.பழனியாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.'