tamilnadu

புதுக்கோட்டையில் ரூ.53 கோடியில் குடிமராமத்துப் பணிகள்

புதுக்கோட்டை, ஜூலை 26- புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அர சின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.53 கோடி  மதிப்பில் 242 பணிகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள தாவது: குடிமராமத்து திட்டத்தின்கீழ் நீர்நிலை களை தூர்வாரி, நீர்பிடிப்புத் தன்மையை அதி கரித்து, நிலத்தடி நீர்மட்டம் மேம்பட அந்த ந்தப்பகுதி பாசனதாரர் சங்கங்கள் மூலமாக  மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு கிறது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமரா மத்து திட்டத்தின் கீழ் 2016-17 ஆம் நிதியா ண்டில் 113 பணிகள் ரூ.3.37 கோடி மதி ப்பீட்டிலும், 2017-18 ஆம் நிதியாண்டில் 20 பணி கள் ரூ.7.63 கோடி மதிப்பீட்டிலும், 2019-20 ஆம்  நிதியாண்டில் 66 பணிகள் ரூ.20.27 கோடி மதி ப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

நடப்பு 2020-21 நிதியா ண்டில் 43 பணிகள் ரூ.21.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும் காவிரி மற்றும் பொன்னனியாறு உப வடிநிலப்பகுதிகளில் 2016-17ஆம் நிதியா ண்டில் நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் 61 கண்மாய்கள் ரூ.13.68 கோடி மதிப்பீட்டில்  புனரமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளன. மாவட்டத்தில் டெல்டா பகுதி விவ சாயிகள் பயன் பெறும் வகையில் ‘கல்லணை  கால்வாய்களை தூர்வாரும் வகையில் சிற ப்புதூர்வாரும் பணி’ எனும் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் 23.64 கி.மீ நீளமுள்ள கால்வாய்  ரூ.1.42 கோடி மதிப்பீட்டிலும், நடப்பு 2020-21  ஆம் நிதியாண்டில் 93.23 கி.மீ நீளமுள்ள கால்வாய் ரூ.1.74 கோடி மதிப்பீட்டிலும் முழுவ துமாக தூர்வாரப்பட்டு பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளன.