tamilnadu

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா உற்சாகத்துடன் தொடங்கியது

மாணவர்களும் பங்கேற்க  ஆட்சியர் அழைப்பு

புதுக்கோட்டை, பிப்.14- புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் மாண வர்களும் பெருமளவில் பங்கேற்று பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நான்காவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா பிப்.14 முதல் 23-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்ற  வளாகத்தில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமையன்று புத்தகக் கண்காட்சியை தொடங்கிவைத்து உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:

கீழடி அரங்கம்

புதுக்கோட்டையில் இதுபோன்ற புத்தகத் திருவிழா சிறப்பாக வடி வமைக்கப்பட்டு நடைபெற்றுவருவது பாராட்டுக்குரியது. இங்கே காட்சிப் படுத்தப்பட்டுள்ள ஏராளமான புத்தகங் களை வாசகர்கள் பெருமளவில் வாங்கி நமது மாவட்ட மக்கள் புத்தகத் திரு விழாவை ஊக்கப்படுத்த வேண்டும். தமிழக அரசின் தொல்லியல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘கீழடி’ அரங்கம் மிக நேர்த்தியாக வடிவமைக் கப்பட்டுள்ளது. கீழடி அரங்கத்தை அனைத்துத்தரப்பு மக்களும் பார்வை யிட்டு தமிழனின் 2600 ஆண்டு களுக்கும் முந்தைய நாகரிகத்தை உணர வேண்டும்.

பிரமிப்பூட்டும் கோளரங்கம்

விண்வெளி அதிசயத்தை விளக்கும் வகையில் இங்கு அமைக்கப் பட்டுள்ள கோளரங்கம் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது. இந்தக் கோள ரங்கம் மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகும். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு  அறிவியல் நிகழ்வுகளும் இங்கு திட்ட மிடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. எனவே, வாசகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மட்டுமல்லாது மாண வர்களும் பெருமளவில் புத்தகத் திரு விழாவில் கலந்துகொண்டு பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மாணவர்களுக்கான கோளரங் கத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. வே.அருண்சக்திகுமார், மாதத்திற்கு ஒரு புத்தகத்தை வாசிப்பவர்கள்கூட தங்களை பெரிய படிப்பாளியாகக் காட்டிக்கொள்கின்றனர். இதுபோன்ற புத்தகத் திருவிழாவிற்கு வரும் பொழுதுதான் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம். கற்றுக் கொள்ள வேண்டியது பரந்துவிரிந்து கிடக்கிறது என்பதை உணரமுடியும் என்றார். புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவிற்கு கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் த.ஜெயலெட்சுமி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் லெ.பிர பாகரன், மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக புத்த கத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் அ.மணவாளன் வரவேற்க, பொருளாளர் ம.வீரமுத்து நன்றி கூறினார். விழா ஒருங்கிணைப்பாளர்கள் நா.முத்துநிலவன், அ.ராஜ்குமார், கே.சதாசிவம் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.

மாலையில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு ஸ்ரீகாமராஜ் கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் குரு.தனசேரகன் தலைமை வகித்தார். சித்த மருத்துவர் கு.சிவராமன், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் துணை இயக்குநர் முனைவர் சங்கர சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்பு  விருந்தினர்களாக காவல் துணைக் கண்காணிப்பா ளர் பி.கோபாலச்சந்திரன், நகராட்சி ஆணையர் ஜீவா.சுப்பிரமணியன், எஸ்.வி.எஸ்.ஜெயக்குமார், அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். 

மருத்துவர் எஸ்.விஜிக்குமார், அறிவியல் இயக்க முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தசாமி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் த.ஜீவன்ராஜ், ஆர். நமச்சிவாயம், எஸ்.இளங்கோ ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் க.சதாசிவம் வரவேற்க, குன்றாண்டார்கோவில் ஒன்றியச் செயலாளர் கு.வடிவேல் நன்றி கூறினார்.  புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளி, வெள்ளாளவிடுதி அரசு உயர் நிலைப்பள்ளி, புதுக்கோட்டை குட்டிமாஸ் வேத விகாஸ் தொடக்கப்பள்ளிகளின் கலை நிகழ்ச்சிக ளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.                      (ந.நி)