சென்னை,டிச.27- தமிழ்நாட்டில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகளை ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக மக்கள் தொகை கணக் கெடுப்பு இயக்குனரகம் தெரி வித்துள்ளது. இதற்காக மொபைல் ஆப் (செயலி) மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு விவரங்கள் சேகரிக்கப்படும். ஒரே பகுதியில் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேலும் வசிப்பவர்கள், அல்லது அந்த பகுதியில் இன்னும் 6 மாதங்களுக்கு மேல் வசிக்க நினைப்பவர்கள், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இடம் பெற தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்களை காண்பித்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.