tamilnadu

img

மதுரை அரசு மருத்துவமனையில் முடக்கப்பட்டிருந்த ஸ்கேன் செயல்பாட்டிற்கு வந்தது

சு.வெங்கடேசன் எம்.பி. முறையீடு; தீக்கதிர் செய்தி எதிரொலி

முதல்வர் திறந்து வைத்தார்

மதுரை, நவ.6- ‘தீக்கதிர்’ செய்தி எதிரொலி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தலால் மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில்  முடக்கி வைக்கப்பட்டிருந்த ‘பெட் சிடி ஸ்கேன்’  என்ற புற்று நோயை துல்லியமாகக்  கண்டறியும் இயந்திரம் புதனன்று செயல்பாட்டிற்கு வந்தது. இந்த இயந்திரத்தை சென்னையி லிருந்தபடியே  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

“மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் பல கோடி ரூபாய் செலவில், புற்று நோயை துல்லியமாகக்  கண்ட றியும் ‘பெட் சிடி ஸ்கேன்’ இயந்திரம் உள்ளது. இது கடந்த எட்டு மாதங் களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்காக காத்திருக்கிறது. இந்தக் கருவியை செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதன் மூலம் மதுரை மாவட்டம் மட்டுமல்ல; திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவ கங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட தென்  மாவட்ட மக்கள் அனைவரும் பயன் பெறுவர். இந்தக் கருவியை முதல்வர் நினைத்தால் உடனடியாக பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியு மென நவ.5-ஆம் தேதி தீக்கதிர் செய்தி வெளியிட்டிருந்தது.

சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை வெற்றி

இந்நிலையில்  சுகாதாரத் துறை செயலாளர் பீலா இராஜேஷ், முதல்வ ரின் செயலாளர் விஜயகுமார் ஆகி யோரை தொடர்பு கொண்ட மதுரை  மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன், இந்தக் கருவியை பயன்பாட்டிற் குக் கொண்டு வருவதில் தொடர்ந்து  தாமதம் நிலவுகிறது; விரைவில் ஸ்கேன் இயந்திரத்தை பயன்பாட்டி ற்குக் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை  அமைச்சர் விஜய பாஸ்கர், மதுரை  மக்களவை உறுப்  பினர் சு.வெங்கடேசன், மருத்துவமனை முதல்வர் மரு. வனிதா, மாவட்ட  ஆட்சியர் வினய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.