திருவண்ணாமலை, செப். 2- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் விநாயகர் சிலை அமைப்பதற்காக சென்ற ஊர்வலத்தில், இந்து முன்னணியின ருக்கும் காவல்துறையினருக்கும், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீ சார் குவிக்கப்படடனர். செங்கத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, வினாயகர் சிலை அமைப்ப தற்காக சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். செங்கம் –போளூர் சாலையில் மசூதி அருகே சென்றபோது, மசூதிக்கு அரு காமையில் மேடை அமைத்து வினாயகர் சிலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மசூதிக்கு அருகாமையில், அதிக சப்தம் எழுப்பக்கூடாது, தொழுகை நேரங்களில் மசூதிபகுதிக்கு ஊர்வலம் வரக்கூடாது என ஏற்கெனவே காவல்துறை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த 3 ஆண்டுகளாக, தொழுகை நேரங்களில் மசூதி அருகே வினாயகர் சிலை ஊர்வலம் கொண்டு செல்லப்படுவதால் அங்கே பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திங்களன்று(செப்.2) விநாயகர் சிலை அமைக்க, ஊர்வலமாக கொண்டு சென்றபோது, மசூதி அருகே போலீ சார் ஊர்வலக்காரர்களுக்கு சில கட்டுப்பாடு களை விதித்தனர். இதனால், இந்து முன்னணி அமைப்பினருக்கும் காவல்துறையின ருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.