புதுச்சேரி, நவ. 26- அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் நாராயணசாமி மருத்துவமனையில் இருந்தே அரசின் கோப்புகளை ஆய்வு செய்தார். இதுகுறித்து புதுச்சேரி முத லமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி முதல்வர் நாரா யணாசமி மூட்டுவலி காரண மாக சென்னையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார். அங்குள்ள மருத்து வர்கள் பரிந்துரையின்பேரில் முதல்வர் நாராயணசாமிக்கு சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது முதல்வரின் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் இருந்து கொண்டே அலுவலகக் கோப்புகளைப் பார்வையிட்டுக் கையப்பமிட்டார். முதல மைச்சரின் உடல் நிலை சீராக உள்ளதால் இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். மேலும், முதலமைச்சர் தற்போது பூரண ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதாலும், விரைவில் மருத்தவமனையிலிருந்து புதுச்சேரி திரும்ப உள்ளதாலும், அவரைக் காண யாரும் சென்னைக்குச் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். தன்னுடைய நலன்குறித்து அன்புடன் விசா ரித்த அனைவருக்கும் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் தன்னுடைய நன்றியினைத் தெரிவித்து கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.