பாபநாசம், நவ.3- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக தொழிலாளி ஒருவருக்கு குடல் இறக்க நோய் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. பாபநாசம் வங்காரம்பேட்டை முஸ்லீம் தெருவைச் சேர்ந்த வர் ஹக்கீம் (32) தொழிலாளி. இவருக்கு பாபநாசம் அரசு மருத்துவமனையில் குடல் இறக்க நோய் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் கிறிஸ்டோ பர், மயக்கவியல் டாக்டர் நிர்மல் குமார், செவிலியர்கள் கௌ சல்யா, விர்ஜினியா ஆகியோர் கொண்ட மருத்துவக் குழு தொழி லாளி ஹக்கீமுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதுகுறித்து பாபநாசம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் குமரவேல் கூறும்போது, பாபநாசம் அரசு மருத்துவமனையில் முதன்முதலாக தொழிலாளி ஹக்கீமிற்கு குடல் இறக்க நோய் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதுவரை பாபநாசம் அரசு மருத்துவமனையில் 5 நோயாளி களுக்கு குடல்வால் ஆபரேஷனும் நடந்துள்ளது என்றார். நுரையீரல் நோய் டாக்டர் ராஜசேகர் உடனிருந்தார்.