districts

img

ஒசூர் காவேரி மருத்துவமனையில் பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

கிருஷ்ணகிரி, மார்ச் 16- கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் காவேரி மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு முதன் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இதுகுறித்து அந்த மருத்துவமனையின் இயக்குநர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களி டம் கூறியதாவது: ஒசூர் காவேரி மருத்துவமனையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 32 வயது பெண் சிகிச்சைக்கு வந்தார். அவ ருக்கு கடந்த ஜனவரி முதல் வாரம் 3 முறை சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள், ஆலோ சகர்கள் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து அவரது குடும்பத்தினரிடம் எடுத்துரைக்கப்பட்டது.  இதையடுத்து, அவரது தந்தை தனது மகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுப்பதற்கு முன்வந்தார். மருத்துவ பரிசோதனை செய்து அவர் சரியான தான கொடையாளி என உறுதி செய்யப்பட்டு முறையாக தமிழ்நாடு அரசிடம் சட்டப்படி அனுமதி பெற்று கடந்த பிப்ரவரி 26இல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் வெங்கடேஷ், சாய்சமீரா தலைமையில் மருத்துவக் குழுவினர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.  அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்ட சிறுநீரகமானது உடனடியாக செயல்படத் தொடங்கியது. ஒரு வாரத்தில் சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்ட பெண் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தற்போது வழக்கம் போல் அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறார். தான கொடையளியான அவரது தந்தையும் நலமுடன் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.