திருச்சி, ஆக.24- திருச்சியில் நடைபெற்ற தமுஎகச மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி பேசியது: தமிழ்மொழியை கொஞ்சம் கொஞ்சமாக குழி தோண்டிப் புதைக்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் உறுதி மொழி எடுக்கும் போது வட நாட்டவர்கள் முகத்தை சுழிக் கின்றனர். அந்த அளவிற்கு அவர்கள் தமிழ் மொழியின் மீதான வன்மத்தில் இருக்கின்ற னர். இன்றைக்கு நாடாளுமன் றம் 90 சதவிகிதம் காவி மயமாகி விட்டது. குழந்தைகள் மாறு வேடப் போட்டியில் வருவதைப் போல பிஜேபி எம்பிக்கள் சாமி யார்களாக, மந்திரவாதிகளாக நாடாளுமன்றத்திற்குள் வரு கின்றனர். தேசியக் கல்விக் கொள்கை மூலம் இந்தியைத் திணிப்ப தற்கு அவர்கள் திட்டமிடுகின்ற னர். 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று சொல்லி மாணவர்களை வதைக்கப் பார்க்கின்றனர்.
ஏற்கனவே நீட் தேர்வால் மருத்துவக் கல்வி கிடைக்காமல் மாணவர்களின் தற்கொலை தொடர்கிறது. இப் பொழுது அனைத்துக் கல்விக் கும் நீட் தேர்வைக் கொண்டு வருகின்றனர். மருத்துவம் படித்தாலும் டாக்டர் ஆக வேண்டுமென்றால் மீண்டும் தேர்வு என்கின்றனர். புதுச்சேரியில் 8 மருத்துவக் கல்லூரி, 18 பொறியியல் கல்ரிகள் இருக்கின்றன. இது இல்லாமல் நிகர்நிலைப் பல்க லைக்கழகம் உள்ளது. எங்கள் நிலத்தை, தண்ணீரை, மின்சா ரத்தைப் பயன்படுத்திக் கொள் ளும் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் எங்கள் மாநிலத் தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடையாது. ஒட்டுமொத்தமாக நமது பிள்ளைகளின் கல்வியை வியா பாரமாக்கும் நடவடிக்கையை ஒரு போதும் அனுமதிக்க முடி யாது. தேசியக் கல்விக் கொள் கையை நிராகரிக்க வேண்டு மென வலியுறுத்தி புதுச்சேரி அர சின் சார்பில் கடிதம் எழுதியுள் ளேன். சட்டமன்றத்திலும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில முதலமைச் சர்களின் மாநாட்டை கூட்டவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதில் புதுச்சேரி அரசு ஒரு போதும் பின்வாங்காது என் றார்.