states

அரசுப் பள்ளிகளை சீரழிக்கும் புதுச்சேரி அரசு: சிபிஎம் கடும் கண்டனம்

புதுச்சேரி, ஆக 6- அரசுப் பள்ளிகளை திட்டமிட்டு  சீரழிக்கும் புதுச்சேரி ஆட்சியாளர் கள், அதிகாரிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிறுப்பதாவது: கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புதுச் சேரியில் அரசுப்பள்ளிகளுக்கு நிகராக தனியார் பள்ளிகள் எண்ணிக்கை இருந்தாலும் தற்போது  நிலமை மாறியுள்ளது. இத்தகைய நிலை தொடருவதற்கு ஆளுகின்ற ஆட்சியாளர்கள் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட வைகளை இன்னும் வழங்குவதற்கு எந்த ஏற்பாடும் செய்யாதது கவலை யளிக்ககூடியது. ஒருவகுப்பில் பயிலும் மாண வர்களுக்கு விரல்விட்டு எண்னும் வகையில் புத்தகம் கொடுத்துவிட்டு புத்தகங்கள் கொடுத்துவிட் டோம் என்று துணைநிலை ஆளுநரும், அமைச்சரும் மக்களிடம் தம் பட்டம் அடித்து வருகின்றனர். ஏற்கனவே மாணவர்களின் கற்றல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அரசுப்பள்ளி மாணவர்கள் நிலையோ மிக மோசமாக உள்ளது. ஆட்சியாளர்கள் திட்டமிட்டு அரசுப்பள்ளிகளை நோக்கி வரும் பெற்றோர்களை மறைமுகமாக கட்டாயபடுத்தி தனியார் பள்ளிக ளுக்கு தள்ளுகின்றதோ என்ற அச்சம் எழுகிறது.  எனவே புதுச்சேரியில் ஆளும்  என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு விளம்பர அரசியலை  முன்னெடுப்பதை விட்டு, ஆக்க பூர்மான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்க ளுக்கான அனைத்து திட்டங்களை யும் காலதாமதமின்றி  செயல்படுத்த வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்டவைகளை போக்கி அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது. மேற்கொண்ட கோரிக்கைகள் மீது ஆட்சி யாளர்கள்,கல்வித்துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்  மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.