tamilnadu

img

புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியை நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 12-ஆவது நாள் அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது , நகராட்சிகளின் மக்கள்தொகை மற்றும் வருவாய் தொடர்பாக திமுக உறுப்பினர் அனிபால் கென்னடியின் கேள்விக்கு பதிலளித்து முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியை நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், அரியாங்குப்பம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துகளை நகராட்சியாக உயர்த்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.