tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

கருத்துக் கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்!

2026-இல் யார் தமிழக முதல்வராக வாய்ப்புள்ளது என சி-வோட்டர் நிறுவனம்  ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இதில், தற்  போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கே அதிகமா னோர் ஆதரவு தெரிவித்துள் ளனர். 2026-ஆம் ஆண்டு தமி ழக சட்டப்பேரவைத் தேர்தல்  நடைபெற உள்ள நிலையில்,  2026-இல் தமிழக முதல்வர் யார்; முதல்வராக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்று சி-வோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதில், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின், 27  சதவிகிதம் வாக்குகள் பெற்று  முதலிடத்தைப் பெற்றுள் ளார். புதிதாக கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலை வர் விஜய் 18 சதவிகிதம் ஆத ரவுடன் இரண்டாமிடம் பெற்  றுள்ளார். பிரதான எதிர்க் கட்சியான அதிமுக-வின்  பொதுச்செயலாளர் எடப்  பாடி பழனிசாமி மூன்றாமி டத்திற்கு தள்ளப்பட்டுள் ளார். அவரை 10 சதவிகிதம்  பேர் மட்டுமே ஆதரித்துள்ள னர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை 9 சதவிகி தம் பேர் ஆதரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 2026-இல் திமுக தலை மையிலான ஆட்சியே மீண்  டும் அமைய வாய்ப்பிருப்ப தாகவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மு.க. ஸ்டாலின் தலை மையிலான தற்போதைய அரசின் நடவடிக்கை பற் றிய கருத்துக்கணிப்பில் 15  சதவிகிதம் பேர் மிகவும்  திருப்திகரமாக இருப்பதாக வும் 36 சதவிகிதம் பேர் ஓர ளவு திருப்தி என்றும் கூறி யுள்ளனர். 25 சதவிகிதம் பேர்  திருப்தியில்லை என்றும் 24 சதவிகிதம் பேர் தங்கள் முடிவைக் கூறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எல்பிஜி டேங்கர்  லாரி ஸ்டிரைக்

சென்னை, மார்ச் 29 - தென்மாநில எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் சனிக்கிழமையன்று 3-ஆவது நாளாக தொடர்ந்  தது.  பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்பிஜி  எரிவாயு டேங்கர் லாரிகள் ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு உள்பட  தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  ஆனால், வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைய வேண்டாம்; வீடு மற்றும் வர்த்தக கேஸ் சிலிண்டர்கள் வினி யோகம் வழக்கம் போல் நடக்கும் என்று எண்ணெய் நிறு வனங்கள் அறிவித்துள்ளன.