tamilnadu

இரும்பு மனிதர் தோழர் என்.ஆறுமுகம்

இரும்பு மனிதர் தோழர் என்.ஆறுமுகம்

கம்யூனிஸ்டுக்கே உண்டான எளிமையின் இலக்கண மாக வாழ்ந்து காட்டிய தோழர் என். ஆறுமுகம் அவர்கள் சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து மூன்றாம் வகுப்பு படித்துள்ளார். குடும்ப சூழ்நிலையால் பனியன் தொழிலாளி யாக பணியை தொடங்கினார். பனியன் தொழிலாளர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டு நிர்வாகியாக உயர்ந்தார். சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி நிர்வாகியாகவும் செயல் பட்டார். லாரி தொழிலாளர்கள், சாக்கு தொழிலாளர்கள், சல வைப்பட்டறை, ஜின்னிங், முனிசிபல் தொழிலாளர்களை திரட்டி சங்கமாக திரட்டுவதில் அரும்பாடு பட்டார். சிஐடியு மாநில நிர்வாகியாகவும், சங்கங்களில் மாவட்ட நிர்வாகியா கவும் செயல்பட்டார். கட்சி, தொழிற்சங்க பணிகள் தேவை கருதி முழுநேர ஊழியராக இணைந்தார். சுமைப்பணி தொழிலாளர்களை ஒன்று திரட்டி சங்கமாக திரட்டுவதில் கடும் முயற்சி எடுத்தார். சுமைப்பணி தொழிலாளர் சங்கம் துவங்கப்பட்டதில் இருந்து அவர் மரணத்தை தழுவும் வரை சங்கத்தில் நிர்வாகியாக பணியாற்றினார். ஒப்பற்ற தலை வராக, தோழராக விளங்கினார். 

1967ல் கட்சி உறுப்பினரானார், கோட்டைக்காடு கிளை யில் செயலாளராக பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட கோவை பெரியார் நீலகிரி மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், மாநிலக்குழு உறுப் பினராகவும் செயல்பட்டார். 1984 முதல் திருப்பூர், பல்ல டம், அவிநாசி, பொங்கலுர் உள்ளடக்கிய திருப்பூர் பிரதேச கமிட்டி செயலாளராகவும், 1998 முதல் தெற்கு தாலுகா செயலாளராகவும், 2011 வரை திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், 2003 முதல் 2007 முடிய தெற்கு நகர செயலாளராகவும் பணியாற்றினார். 

கட்சி எந்த பணியை தீர்மானிக்கிறதோ அதை வெற்றிகர மாக செய்து முடிப்பார். தீக்கதிர் விநியோகம் செய்தார், தொழி லாளர் பிரச்சினைகள், சம்பள உயர்வு பேச்சுவார்த்தை, அரசுத் துறை, காவல்துறை பேச்சுவார்த்தைகளில் தன்னு டைய அணுகுமுறையால் வெற்றிகரமாக நினைத்ததை சாதித்து விடுவார் என அவர்களாலேயே பாராட்டப்பட்டவர். மேடைப் பேச்சிலும் நகைச்சுவை கலந்து எளிய மக்களுக்கு  புரியும் வகையில் பேசும் வல்லமையோடு திகழ்ந்தார். பல் வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகளுக்கு வழிகாட்டியாக விளங்கினார். திருப்பூர் அரசியல் வரலாற்றில் மறக்க முடி யாத, அசைக்க முடியாத இரும்பு மனிதராக விளங்கினார். 30.5.2013 அன்று நம்மை விட்டு மறைந்தாலும் அவர் செய்த பணிகளை மறக்காமல் விட்டுச் சென்றுள்ளார். அவர்  வழியில் நமது பணியை செழுமைப்படுத்துவோம்

. -த.ஜெயபால்,