உதகையில் சினிமா படப்பிடிப்புக்கு தடை
நீலகிரி மாவட்டம், உதகையில், கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், அரசு தாவரவி யல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட 8 தோட்டக்கலை பூங்காக்களில் சினிமா படப் பிடிப்புக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள் ளது. மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் உதகையில், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். இந்த சீசனில், வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை தருவார்கள். இந்நிலையில், உதகை யில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா உள்ளிட்ட தோட்டக் கலை பூங்காக்களில், சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இங்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்கள் படமாக்கப் பட்டு வந்தன. ஆனால், கோடை சீசனில் சுற்றுலாப் பய ணிகளின் வருகை அதிகரிப்பதால், அவர் களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிப்லா மேரி கூறுகை யில், “கோடை சீசனை முன்னிட்டு, உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வழக்கத்தைவிட அதிகம் பேர் வருவார்கள். மேலும், நடைபாதையோரம், மலர் பாத்திகளில் மலர் செடிகள் நடவு செய் யப்பட்டு உள்ளன. செடிகளுக்கு சேதம் ஏற்படுவதை தவிர்க்கவும், சுற்றுலாப் பய ணிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வும், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை” என்றார். இந்த தடை, இன்று முதல் அம லுக்கு வந்துள்ளது என்றார்.