tamilnadu

img

ஊடகங்கள் முன்பு பகிரங்க மன்னிப்பு கேட்ட கேரள பாஜக தலைவர்!

ஊடகங்கள் முன்பு பகிரங்க மன்னிப்பு
கேட்ட கேரள பாஜக தலைவர்!

கேரள சுகாதாரத்துறை முன் னாள் அமைச்சர்  பி.கே. ஸ்ரீமதி மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியதற்காக, அம்மாநில பாஜக தலைவர் பகிரங்க மன்னிப்பு கேட் டுள்ளார். கேரள மாநில பாஜக தலை வர்களில் ஒருவர் - வழக்கறிஞர் பி.  கோபாலகிருஷ்ணன், இவர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக் குழு உறுப்பினரும், கேரள முன்  னாள் அமைச்சருமான பி.கே. ஸ்ரீமதி மீது, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு  ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி யிருந்தார். அதாவது, ஸ்ரீமதி சுகாதாரத் துறை யில் அமைச்சராக இருந்தபோது, தனது மகனின் நிறுவனத்திலிருந்தே, சுகாதாரத் துறைக்கு தேவையான மருந்துகளை வாங்கியதாக குற்றம் சாட்டினார். தொலைக்காட்சி விவா தத்தில் இதனைக் கூறினார். இது பொய்யானது, என்று அப் போதே பி.கே. ஸ்ரீமதி கூறினார். மேலும்,  பாஜக தலைவருக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொட ர்ந்தார். இந்த வழக்கு 6 ஆண்டு களுக்கு மேல் நடைபெற்ற நிலையில்,  தான் முன்வைத்தது ஒரு ஆதாரமற்ற  குற்றச்சாட்டு என்றும், தனது கூற்றுக் களை நிரூபிக்க எந்த ஆதாரமோ ஆவ ணங்களோ தன்னிடம் இல்லை என்றும்  கோபாலகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அத்துடன், உயர்நீதிமன்ற வழி காட்டுதலின் படி, வெள்ளிக்கிழமை யன்று ஊடகங்கள் முன்னிலையில் பி.கே. ஸ்ரீமதி முன்பு பகிரங்க மன்னிப்பு  கேட்டார்.  இந்நிலையில், பாஜக தலைவரின் மன்னிப்பு குறித்து பேட்டியளித்த பி.கே. ஸ்ரீமதி, “பொது வாழ்வில் உள்ள பெண்கள், குறிப்பாக இடது சாரி இயக்கங்களுடன் தொடர்புடை யவர்கள், தொடர்ந்து பாஜகவினரின் இதுபோன்ற பொய்யான கதைகள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் தீங்கிழைக்கும் தாக்குதல் களுக்கு ஆளாகிறார்கள்” என்று தெரி வித்தார். மேலும், “அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டில் பெண்களின் பங்களிப்பை இழிவுபடுத்தவும், குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் ஒரு  பெரிய, இலக்கு வைக்கப்பட்ட முயற்சி யின் ஒரு பகுதியாக இந்த தாக்கு தல்கள் இருப்பதாகவும், இந்த தவ றான நடத்தை முறையை பொறுத்துக்  கொள்ளக்கூடாது” என்றும் கூறினார்.