tamilnadu

img

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் 1000க்கும் மேற்பட்டோர் பலி

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் 1000க்கும் மேற்பட்டோர் பலி

இந்தியா - சீனா உதவி நய்பிடாவ்,

மார்ச் 29- மியான்மர் மற்றும் தாய்  லாந்து நாடுகளில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு, பலியானவர்கள் எண்ணிக்கை 1000-ஐக் கடந்துள்  ளது. 2000-க்கும் மேற்பட்டோர் காயங் களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள் ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே, வெள்ளிக்கிழமை (மார்ச் 28) அன்று காலை 11.50 மணி அள வில் 7.7 ரிக்டர் அளவில் பயங்கர  நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்த  நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. அடுத்த  10 நிமிடத்தில் அங்கு 2 ஆவது  முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளி களாக பதிவானது.  அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் காரணமாக, மியான்மரின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள்  இடிந்து விழுந்தன. இங்குள்ள பழ மையான அரண்மனையும் இடிந்து விழுந்தது. இணைய மற்றும் தொலைத்தொடர்புச் சேவைகள் முடங்கியதால், பலியானோர் விவ ரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.

இந்திய மற்றும் தமிழக அரசு சார்பில்  உதவி எண்கள் அறிவிப்பு

மியான்மரில் பேரழிவு நடந்துள்ள நிலையில், இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் என மியான்மரில் உள்ள இந்திய  தூதரகம் தெரிவித்துள்ளது. உதவி தேவைப்படும் இந்திய குடிமக்கள் +95- 95419602 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறி வித்துள்ளது. மியான்மரில் உள்ள தமிழர்களுக்கு, அயலகத் தமிழர்  நலத்துறையும் உதவி எண்களை அறிவித்துள்ளது. உதவித் தேவைப்  படும் தமிழர்கள்: 1800 309 3793, +91 80690 09901, + 91 80690 09900 ஆகிய எண்  களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்நிலையில், தற்போது மியான்மர் நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடு களில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு ராணுவ அரசு  அறிவித் துள்ளது. தாய்லாந்து  தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக் கத்தில் இதுவரை 10 பேரின் உயி ரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாங்காக் நகரின் அடுக்குமாடி கட்டடம் கட்டுமானப் பணியிடத்தில் 100க்கும் அதிகமானோர் இடிபாடு களில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு  பலி எண்ணிக்கை மேலும் அதி கரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படு கிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட் டுள்ள மியான்மருக்கு 15 டன் அளவிலான நிவாரணப் பொருட்க ளை இந்தியா அனுப்பி வைத்துள் ளது. உணவுப் பொருட்கள், மக்கள் தங்குவதற்கு தேவையான தற்காலிக கூடாரங்கள், அத்தியா வசிய மருந்துகள் உள்ளிட்டவற்றை இந்தியா அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஐக்கிய நாடுகள் அவை, முதற்கட்டமாக 5 மில்லியன் டாலர்களை நிவாரண உதவிக்காக கொடுத்துள்ளது.  மீட்புப்பணிக்காக சீனா தனது நாட்டில் இருந்து மீட்புப்படையினரை அனுப்பியுள்ளது. மேலும் 13.8 மில்லியன் அமெரிக்கா டாலர்களை யும் நிவாரண நிதியாக வழங்கி யுள்ளது.  கடந்த காலங்களில் மியான் மரில் இதுபோன்ற நெருக்கடி ஏற் படும்போது வெளிநாட்டு உதவி களை ஏற்க அந்நாடு தயக்கம் காட்டியது. ஆனால் தற்போதைய அதிபர் மின் ஆங் ஹ்ளெய்ங் தலை மையிலான அரசு வெளிநாட்டு நிதி களை ஏற்பதற்கு தயாராக இருப்ப தாக வெளிப்படையாகவே கூறி யுள்ளது.