கைத்தறி நெசவாளர்கள் ஓய்வூதியம் பெற நிபந்தனைகள் தளர்வு
அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு]
சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி கைத்தறி நெசவாளர்களுக்கான ஓய்வூதிய நிபந்தனைகளை தளர்த்தி யுள்ளதாக அறிவித்துள்ளார். இதன்படி, 56 வயது முதல் 60 வயது வரையி லான 5 ஆண்டுகளில் ஓராண்டு தொழில் செய்திருந்தால் ஓய்வூதியம் பெற தகுதி யுடையவர்களாக கருதப்படுவார்கள். கைத்தறித் துறையின் நிலை தமிழ்நாடு கைத்தறிகளின் எண்ணிக் கையில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் 1.91 லட்சம் கைத்தறிகளும், 2.44 லட்சம் கைத்தறி நெசவாளர்களும் உள்ளனர். 2023-24 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, நாட்டில் 28.23 லட்சம் கைத்தறிகள் மூலம் 35.23 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
விசைத்தறித் துறையில் மகாராஷ்டிரா விற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 5.68 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதில் 10.18 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரி கின்றனர். நாட்டின் மொத்த உற்பத்தியில் 20% மற்றும் தொழிலாளர்களின் எண் ணிக்கையில் 23% தமிழ்நாட்டின் பங்களிப்பாக உள்ளது. பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் கீழடி, கொடுமணல், உறையூர் மற்றும் அரிக்கமேடு ஆகிய இடங்களில் நடந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சாயத் தொட்டிகள், நெசவுத் தொழி லில் தமிழர்களின் வளமான பாரம்பரி யத்தைக் காட்டுகின்றன. கீழடி பழங்கா லத்தில் முக்கிய நெசவுத் தளமாக விளங்கியது. உற்பத்தி மற்றும் விற்பனை 2024-25 ஆம் ஆண்டில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் ரூ.882.40 கோடிக்கு கைத்தறி துணிகளை உற்பத்தி செய்து, ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. கைத்தறி நெச வாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக கடந்த ஆண்டில் ரூ.14.11 கோடி செலவிடப்பட்டது.
இத னால் 69,830 பேர் பயனடைந்தனர். இந்த ஆண்டு இத்திட்டத்திற்கு ரூ.15.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளாகம் எழும்பூரில் உள்ள கோ-ஆப் டெக்ஸ் வளாகத்தில் ரூ.227 கோடியில் 4.54 லட்சம் சதுர அடியில் 8 தளங்கள் மற்றும் 2 கீழ் தளங்களுடன் ஒருங்கிணைந்த வளா கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் “கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் திறன் மிகு கைவினைப் பொருட்களுக்கான வடிவமைப்பு புத்தாக்க மையம்” மற்றும் “கைத்தறி கைவினைப் பொருள் அருங் காட்சியகம்” ஆகியவை இடம்பெறும். வீட்டு வசதித் திட்டங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு அனுப்பப்பட்ட 1,950 விண்ணப்பங்களில், 815 வீடு கள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது. இதில் 548 வீடுகள் நிறைவடைந் துள்ளன. கிராமப் புறங்களில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தகுதி பெறாத 2,996 நெசவாளர்களில், 448 பேர் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கைத்தறி பூங்காக்கள் கோவை, ஈரோடு, பெரம்பலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், பரமக்குடி, வேலூர், கரூர், சேலம், மற்றும் திருச்சி ஆகிய 10 இடங்களில் ரூ.20 கோடி செல வில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக் கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோ-ஆப் டெக்ஸ் சாதனைகள் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் 2024-25 ஆம் ஆண்டில் ரூ.228 கோடிக்கு சில்லறை விற்பனை செய்துள்ளது.
இது முந்தைய ஆண்டைவிட ரூ.13 கோடி அதிகம். இணையவழி விற்பனையில் முதல் முறையாக ரூ.2 கோடி விற்ப னையை எட்டியுள்ளது. விற்பனை நிலை யங்கள் நவீனப்படுத்தப்பட்டு, புதிய வடி வமைப்புகளுடன் கூடிய ரகங்கள் அறி முகப்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய அறிவிப்புகள் கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப் படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி 10% உயர்த்தப்படும். இதனால் 1.5 லட்சம் பேர் பயனடைவார்கள். தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் ‘இல்லம் தேடி பட்டு’ திட்டம் செயல்படுத்தப்படும். கரூர், கும்பகோணம், திருப்பூர், சேலம் மற்றும் திருவண்ணாமலை சரகங் களைச் சேர்ந்த 15 தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வடிவமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.1.20 கோடி நிதி வழங்கப்படும்.