புதுச்சேரி,மார்ச்.18- கடைகளின் பெயர் பலகைகள் தமிழில் தான் இருக்கவேண்டுமென்ற புதுச்சேரி முதல்வரின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து கடைகளின் பெயர் பலகைகளும் தமிழில் தான் இருக்க வேண்டுமென முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார் மேலும் அனைத்து அரசு விழாக்களுக்கான அழைப்பிதழ்களும் தமிழில் தான் இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.