tamilnadu

புதுச்சேரியில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 புதுச்சேரி,அக்.16- இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு காரண மான மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரியில் இடது சாரிகட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம் தலைமை தாங்கினார்.  சிபிஎம் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், தமிநாடு மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், மூத்த தலைவர் தா.முருகன், சிபிஐ தேசிக்குழு உறுப்பி னர் நாரா.கலைநாதன், முன்னாள் செயலாளர் விசுவ நாதன், சிபிஐ எம்எல் கட்சியின் மாநில நிர்வாகி மோதிலால் உட்பட திரளான இடதுசாரிகட்சித் தலைவர்கள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.