பொள்ளாச்சி, ஆக. 21- வால்பாறை அடுத்த கல்லாறு மற்றும் நாகரூத்து ஆகிய இரு வன கிராமங்களில் வசிக்கும் பழங்குடி யின மலைவாழ் குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கிடக்கோரி அனைத்து கட்சி கூட்டியக்கத்தினர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாவட்டம், வால்பா றையை அடுத்த கல்லாறு வன கிரா மத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடர்மழை வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு 23 பழங்குடி யின குடும்பங்களைச் சேர்ந்தோர் வீடுகளை இழந்தனர்.
அவர்களை தற்காலிகமாக தாய்முடி எஸ்டேட் குடியிருப்பு முகாம்களில் வனத் துறையினர் தங்க வைத்தனர். இதே போல், டாப்சிலிப்பை அடுத்த நாக ரூத்து 2 செட்டில்மென்ட் வன கிரா மத்திலும் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 27 குடும்பங் கள் வீடுகளை இழந்து, தற்காலிக மாக தகர கூரைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.
ஆனால், இது வரை வனத்துறையோ, வருவாய்த் துறையோ எந்தவிதமான நடவடிக் கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த பழங்குடியின மக்கள் ஆக. 15ம் தேதி வன கிரா மத்திலேயே மாற்று இடம் வழங்கி டக்கோரி கல்லாறு வன கிராமத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தினை கைவிட்டனர்.
இந்நிலையில், கடந்த ஆக.18 ஆம் தேதியன்று பொள்ளாச்சி பர்வானா அரங்கில் அனைத்துக் கட்சி கூட்டியக்கத்தினர் பங்கேற்று இப்பிரச்சனை தொடர்பாக ஆலோ சனை மேற்கொண்டனர். இதில், வனத்துறை மற்றும் சார் ஆட்சி யர் அலுவலகத்தில் இது தொடர் பாக மனு அளிப்பது என முடிவு செய் யப்பட்டது. இதனையடுத்து, வெள் ளியன்று பொள்ளாச்சி சார் ஆட்சி யர் அலுவலகத்தில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் வி.எஸ்.பரம சிவம் தலைமையில் மனு அளிக் கப்பட்டது.
இதில், திமுக நகரச் செயலா ளர் கே.வரதராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள் ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகா லிங்கம், மதிமுக பொள்ளாச்சி நகரச் செயலாளர் துரைபாய், காங்கிரஸ் கட்சியின் காளிமுத்து, விசிக மாவட் டச் செயலாளர் ச.பிரபு, மனித நேய மக்கள் கட்சியின் பொருளா ளர் ஷேக் அப்துல்லா, மஜக நிர்வாகி முஸ்தபா, தபெதிக இரா.மனோக ரன், ஆதித்தமிழர் பேரவையின் தி.சே.கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், பொள்ளாச்சி சுண் னாம்பு கால்வாய் பகுதியிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மாவட்ட வன அலுவலர் மற்றும் கள இயக்குனரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.