சென்னை, ஜூன் 5- எக்விடாஸ் சிறுநிதி வங்கி, இந்தியாவெங்கிலும் உள்ள அதன் அனைத்து கிளைகளிலும் உலக சுற்றுச்சூழல் தினத்தைசிறப்பாக அனுசரித்தது. இந்நிகழ்வின் ஒரு அங்கமாக, நாடெங்கிலும் மரம்வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, மரக்கன்றுகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும் நிகழ்ச்சியைநடத்தியது. சிறப்பான எதிர்காலத்தை வரும் தலைமுறையினருக்கு உறுதிசெய்வதற்காக சுற்றுச்சூழலை பாதுகாப்பது மீதும் மற்றும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்க்கவும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும்நோக்கத்தோடும், அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக இந்நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடெங்கிலும் அமைந்திருக்கிற இவ்வங்கியின் 138 கிளைகள் இந்த விழிப்புணர்வுத் திட்டத்தில் பங்கேற்றன. வாடிக்கையாளர்களுக்கு கட்டணமில்லாமல் இலவசமாக, நம் நாட்டிற்கே உரிய 22,000-க்கும் அதிகமானமரக்கன்றுகள் வழங்கப்பட்டன.