தொடர் மழை எதிரொலியாக பெரம்பலூரில் கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது இதனால் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கி காய்கறி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக காய்கறி வரத்து மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து காய்கறிகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பெரம்பலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூபாய் 30க்கு கீழ் விற்கப்பட்ட வெண்டை, கத்தரி, முள்ளங்கி புடலை மற்றும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையான முருங்கை, அவரை போன்ற காய்களை இன்று கிலோ 150 ரூபாய்க்கு மேல் உயர்ந்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.