பெரம்பலூர், பிப்.11- பெரம்பலூர் மாவட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாயன்று நான்குரோடு அரு கிலுள்ள மேற்பார்வை பொறியா ளர் அலுவலகத்தில் நடைபெற் றது. அப்போது தமிழக விவசாயி கள் சங்கம் ஆர்.ராஜாசிதம்பரம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் என்.செல்லதுரை உள் ளிட்ட விவசாயிகள் சார்பில் பல் வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மேற்பார்வை பொறியாளர் கருப்பையாவிடம் மனு அளித்தனர். அம்மனுவில் மின் இணைப்பு வேண்டி சாதாரண முன்னுரிமை யில் பதிவு செய்து காத்திருக்கும் 488 விவசாயிகளுக்கு தேவை யான உபகரணங்களை வழங்கி உடனடியாக மின் இணைப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே போல் 1.4.2000 தேதிக்கு பின்னர் 31.3.2018 வரை நிலுவையில் உள்ள சாதாரண முன்னுரிமையில் சுயநிதி திட்டம் மற்றும் தாட்கோ திட்டத்தின் மூலம் மின் இணைப்பு வேண்டி பதிவு செய்த 6 ஆயிரத்து 196 பேருக்கும் உடனடியாக வழங்க வேண்டும். அதுமட்டுமில்லாது 1.4.2018க்கு பின்னர் இன்று வரை மின்இணைப்பு கேட்டு நிலுவை யில் உள்ளோர் பட்டியலை தெரி விக்க வேண்டும். பெரம்பலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளான அயன்பேரையூர், வி.களத்தூர் செல்லும் சாலை அருகே விவசாய நிலங்களில் சாய்ந்துள்ள மின்கம்பம் மற்றும் ஆண்டிகுரும்பலூர் ஏரியின் உள்புறம், சாய்ந்துள்ள மின்கம் பங்களை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தெரி வித்துள்ளனர்.