திருப்பூர், மார்ச் 2 - திருப்பூர் மாவட்டம் ஊத்துக் குளி வட்டம், காவுத்தம்பாளையம் கிராமத்தில் அமைக்க உத்தேசித் துள்ள மின் நிலையம் மற்றும் மின் கோபுரம் அமைக்கும் திட் டத்தை விவசாயிகள் நலன் கருதி நிறுத்திடவும், காவுத்தம்பாளை யம் ஏரி பாசன பகுதி விளை நிலங் களை பாதுகாக்கவும் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு என்.டி.வெங்க டாசலத்திடம் அப்பகுதி விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் மனு அளித்தனர். இது குறித்து காவுத்தம்பாளை யம் ஏரி பாசனப் பகுதி விவசாயி கள், கிராம மக்கள் மற்றும் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் ஆர்.குமார் உடன் சென்று திங்களன்று எம்எல்ஏ தோப்பு என்.டி.வெங்கடாசலத் திடம் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது: பெருந்துறை தொகுதிக்குட் பட்ட ஊத்துக்குளி வட்டம், காவுத் தம்பாளையம் கிராமத்தில் காவுத் தம்பாளையம் ஏரி சுமார் 75 ஏக் கர் பாசனப் பகுதியைக் கொண் டது. அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் சேர்க்கப்பட்டதில் இந்த ஏரியும் ஒன்று. இந்த ஏரி யைச் சுற்றியுள்ள தோட்டத்து விவசாய பூமிகள் கடந்த காலத்தில் நல்ல வளமான நெல் விளைச்சல் நடைபெற்ற பூமியாகும். தற் போது கடலை, சோளம், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் விவசாயிகளால் விளைவிக்கப் பட்டு வருகிறது. தற்போதும் காவுத்தம்பாளையம், வெள்ளிர வெளி, கருமஞ்சிறை, செங்காளி பாளையம், கூனம்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பெரும்பா லான மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்த காவுத்தம்பாளையம் குளத்தில் அவிநாசி-அத்திக்கடவு திட்டப் பணிகள் இன்னும் 10 மாதங்க ளில் முடிவுற்று குளத்திற்கு நீர் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு விவ சாயிகள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகளும் இக்குளத் திற்கு நீரை எதிர்பார்த்து இருந்த நிலையில், இந்த குளத்துப் பாசனப் பகுதியில் புதியதாக 765 கே.வி. மின்நிலையம் அமைத்து, அதற்கு விருதுநகரிலிருந்து 765 கே.வி. உயர் மின்கம்பி வழித்தடமும், உயர்மின் கோபுர மும் அமைத்து மின்சாரம் எடுத்து வரும் புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் முனைந் துள்ளது. இது இப்பகுதி விவசா யிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த மின் நிலையம் அமைப்பதற்காக சுமார் 140 ஏக்கர் விவசாய நிலத்தை தமி ழக மின்சார வாரியம் காவுத்தம் பாளையம் கிராமத்தில் கையகப் படுத்த முயற்சித்து வருகிறது. இதற்கான எந்த வெளிப்படை யான அறிவிப்பும் செய்யாமல் விவசாயிகளிடம் ஏமாற்றி, அச்சு றுத்தி நிலங்களை பெறுவதற்கு முயற்சித்து வருகின்றனர். விருப் பமில்லாதவர்கள் நிலங்களை தரவில்லையெனில் கட்டாயம் அரசு எடுத்துக் கொள்ளும் என்று புரோக்கர்கள் விவசாயிகளை மிரட்டி வருகிறார்கள். இத்திட்டம் சம்மந்தமாக தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமோ, அரசோ எவ்வித கருத்து கேட்பு கூட்டமோ, வெளிப்படையான அறிவிப்போ செய்யவில்லை. தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் செயல்படுத்தும் இந்த திட்டத்தால் எதிர்காலத்தில் நான்குபுறமும் 13-க்கும் மேற்பட்ட உயர்மின் கோபுர திட்டங்கள் அமைய வாய்ப்புள்ளதால், அதன் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப் படைந்து, நிலத்தின் மதிப்பு பெரும் வீழ்ச்சியடைந்து மதிப்பற்ற தாகிவிடும். உயர்மின் கோபுரத் தால் அதில் வரும் மின்காந்த கதிர் வீச்சால், மனிதர்களுக்கு புற்று நோய் உள்ளிட்ட நோய்களும், கால்நடைகளுக்கும் மிகப்பெரிய பாதிப்பும் ஏற்படும். இந்த நிலங்க ளில் விரும்பிய விவசாயம் செய்ய முடியாது. பனை, தென்னை, மா உள்ளிட்ட பயிர்களை அழித்து விடும் நிலை ஏற்படும். காவுத்தம் பாளையம் ஊராட்சி சுற்று வட்டார பகுதிகள் நன்கு வளர்ந் துள்ள மரங்களை கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியா கவுள்ள நிலையில் அதற்கு மிகப் பெரிய அழிவு ஏற்படும். இதனால் இப்பகுதி விவசாய நிலங்கள் பயனற்றதாக மாறிவிடும் என்கிற காரணத்தால், சட்டமன்ற உறுப்பி னர் இப்பகுதியில் விவசாயத் தையும், விவசாய நிலத்தையும் பாதுகாக்கும் பொருட்டு, காவுத் தம்பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் 765கேவி மின் நிலையம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இதையொட்டி இப்பகுதியில் அமைக்கவுள்ள மின்கோபுர திட்டங்களை மாற்று வழியில் புதை வடமாக சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும். மின் நிலையத் திற்கு நிலம் வழங்க மறுத்தவர் களிடம் அச்சுறுத்தி நிலத்தை பெற முயற்சிக்கும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவிநாசி-அத்திக் கடவு திட்டத்தில் வரும் காவுத்தம் பாளையம் ஏரி பாசன பகுதி விளை நிலங்களை அழிவிலிருந்து காத்திட வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடமும் இக்கோரிக் கையை வலியுறுத்தி மனு அளித் திருப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.