திருவாரூர், ஆக.6- நாடு முழுவதும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்படி இல்லாத விலை காரணமாகவும், இடுபொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்திருப்ப தாலும், விவசாயம் இலாபகரமான தொழிலாக இல்லாத கார ணத்தினாலும், மத்திய மாநில அரசுகளிடமிருந்து உரிய பலன்கள் கிடைக்காததாலும் நாடு முழுவதும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த அவல நிலையை போக்குவதற்காக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தலை நகர் தில்லியில் நாடாளுமன்றம் முன்பாகவும் போராடினர். இதில் குடியரசு தலைவரை சந்தித்து மனு அளித்தனர். விவ சாய சங்க தலைவர்களிடம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கடன் தொல்லையிலிருந்து விவசாயிகள் விடுதலைச் சட்டம் 2018, விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதம் செய்யும் சட்டம் 2018 ஆகி யவற்றை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி இச்சட்டங்களை உடனடியாக நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் குடி யரசு தலைவருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டு வருகிறது. திரு வாரூரில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரைச் சந்தித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, செயலா ளர் வி.எஸ்.கலியபெருமாள் மற்றும் ஜெயபால் ஆகியோர் மனுவை அளித்தனர்.