tamilnadu

img

பெரம்பலூரில் பாரிவேந்தர் வெற்றி

பெரம்பலூர், மே 24-பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஐஜேகே வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தர் 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 13,91,011 வாக்குகளில் 11,03,160 வாக்குகள் பதிவாகின. இத்தொகுதியில், அதிமுக, ஐஜேகே, அமமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 19 பேர் போட்டியிட்டனர். இதில் கடந்த வியாழக்கிழமை தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரியில் நடைபெற்றது. 24 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் டி.ஆர்.பாரிவேந்தர்(ஐஜேகே)- 6,83,697, என்.ஆர்.சிவபதி(அதிமுக)- 2,80,179, கே.சாந்தி(நாம் தமிழர்)- 5,3545, எம்.ராஜசேகரன்(அமமுக)- 45,591, ஆர்.முத்துலட்சுமி(பகுஜன் சமாஜ்)- 4,586 வாக்குகள் பெற்றனர். 11,325 வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.இறுதியாக அஞ்சல் வாக்குகள் உள்பட 11,03.160 வாக்குகள் பதிவானதில் ஐஜேகே வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை விட 4,03,518 வாக்குகள் அவர் கூடுதலாகப் பெற்றார். பாரிவேந்தருக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே.சாந்தா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.