பெரம்பலூர், அக்.14- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வே.சாந்தா தலைமை யில் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் நாரண மங்கலம் பஞ்சாயத்து மருதடி அருகே ஈச்சங்காடு கிராம பொது மக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், மலைப் பகுதியில் 1.53 ஹெக்டேர் பரப்பில் பில்லாளியான் குளம் பல ஆண்டுகளாக மழை நீர் சேக ரிப்பு பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அப்பகுதியில் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவ சாயம் செய்து வருகின்றனர். தற்போது 1.53 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள குளத்தில் பாதி இடங்களுக்கு மேல் அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இந்நிலையில் நபார்டு வங்கியும் ஆர்ஜிஆர் டாடா டிரஸ்ட் குளத்தை ஆழப்படுத்தி கரை அமைத்து மழை நீர் சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி குளம் அமைக்க ஏதுவாக மாவட்ட ஆட்சியர், ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர், குறைதீர் கூட்டத்தில் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்து சென்றனர்.